இன்று கூடுகிறது 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, பேரவைத்தலைவர் அப்பாவு அவர்களும் ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அனுமதி அளித்ததை தொடர்ந்து கூட்டத்தொடர் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தகூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், தமிழில் மொழிபெயர்த்து வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியில் , தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…