ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!
இஃப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார்.
கட்சித் தொடங்கிய பின், இதுபோன்ற விழாவில் விஜய் பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் மார்ச் 07 ல், ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் மார்ச் 7ம் தேதி மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும், மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில், இஃப்தார் விருந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 🙏 #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/Q4cHq5hLEr
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) March 3, 2025