ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு?
குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் நடத்தும் நீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து கடைசி வரை மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்க தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.