vijay [file image]
விஜய் : மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
இன்று டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிய ராகுல் காந்திக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது ” மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…