மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் எல் முருகன் விமர்ச்சித்துள்ளார்.
திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக அறிவித்த எழில்மிகு மாநகர திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருகிறார். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவர் என்று கேட்டுள்ளார். ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விமர்ச்சித்துள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…