மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
திமுக கூட்டணி:
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு:
கடந்த மாதம் 22 ஆம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதன் பின்னர் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி-திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:
இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியின் நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.ஏற்கெனவே நாங்கள் பல தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனை நடைபெறும்,அதன் பின்னர் தெரிவிக்கப்படும்.
மேலும் போட்டியிடும் தொகுதி இறுதி செய்த பின்பு, வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்.அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதால் அந்த கூட்டணிக்கு பலவீனம் தான்.அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…