திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அலைந்தது திரிந்துள்ளர். எனினும் அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் இதுப்பற்றிய விவரம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. இதையறிந்த திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். இதில், உண்மையில் அந்த முதாட்டி உதவித்தொகை பெற தகுதியானவர் என்பது தெரிந்து வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார். ஊடகத்தில் வந்த செய்தியை உரிய விசாரணை செய்து நேரடியாக சென்று அரசின் உதவித்தொகை கிடைக்க செய்த ஒருசில அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது என்று சமூகசேவகர்கள் கருதுகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…