ஆதாயம் தரும் இரட்டை பதவி.! ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!
ஆதாயம் தரும் இரட்டை பதவியில் ஆளுநர் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அண்மையில் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநராக இருப்பவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
குறிப்பிட்ட அந்த அறக்கட்டளை நிர்வாக தலைவராக இருப்பவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். சட்டப்படி ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் வேறு ஊதியம் தரும் வேலையில் இருக்க கூடாது.
அவர் எப்போது அந்த நிர்வாக தலைவர் எனும் பதவியை ஏற்றாரரோ அன்றே ஆளுநர் ஆர்.என்.ரவியில் ஆளுநர் அதிகாரம் செயல்படாது என அறிவிக்க வேண்டும் எனவும், ஆளுநருக்கு எதிராக வழக்கு போட முடியாது என சட்டம் இருக்கிறது. ஆனால், அது ஆளுநர் பதவியின் பெயரில் எடுக்கப்படும் முடிவுக்கு தானே தவிர தற்போது மனுவானது, தனி நபரின் செயல்பாடு குறித்த வழக்கு என மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்/
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கை விசாரிக்கலாமா என இந்த வழக்கு விசரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.