P Shanmugam CPM - Suba Veerapandiyan [File Image]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.!
அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 2023ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருது அறிவிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க உள்ளார். மேலும், விருது பரிசு தொகையான 5 லட்சம் ரூபாயையும் வழங்க உள்ளார்.
சுப வீரபாண்டியன், பெரியாரின் கொள்கைகளை சமூகத்தில் பலமாக தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 54 நூல்களை எழுதி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம், கடந்த 32 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் சங்க தலைவராக பொறுப்பிலிருந்து வருகிறார். மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டு உள்ளார். குறிப்பாக தர்மபுரி மாவட்டம் வாசாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…