வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி – முக ஸ்டாலின்
வேலூர் தொகுதியில் திமுக விற்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது பின்னோக்கி இருந்த திமுக வேட்பாளர் கத்தி ஆனந்த் பிற்பகலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கூடுதலாக வாக்கு பெற்று முன்னிலையில் இருந்து வந்தார்.தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவடையில் திமுக வேட்பாளர் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வேலூர் கோட்டையை திமுக வசம் ஒப்படைத்த வாக்காளர்களுக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திமுக பெரும் வெற்றியை தாமதப்படுத்த நினைக்கலாம் ஆனால், தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.