உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி – வேல்முருகன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பல்லாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் பேரறிவாளன் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இவ்வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
பல்லாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் பேரறிவாளன் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இவ்வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன். pic.twitter.com/x4K89PlMpU
— Velmurugan.T (@VelmuruganTVK) March 9, 2022