நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம்., மோடி அரசுக்கு நினைவுபடுத்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி – ப சிதம்பரம்

Default Image

பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்.14ம் தேதி 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், 8 மாநகராட்சியில் 7ஐ கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது. நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம் என்று மோடி அரசுக்கு நினைவுபடுத்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி எனகூறியுள்ளார்.

மேலும், இளஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குரிமை இருக்கிறது. திஷா ரவி, நிகிடா ஜேகப் மற்றும் JNU, AMU மாணவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்