புதிதாக 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி – முதலமைச்சர் பழனிசாமி
- அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.
- அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் பின்னர் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர்,நாகை ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க பட உள்ளது.இதன் பின்னர் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
எனவே அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்தது.ரூ.650 கோடியில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றது.
அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.எனவே இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் மேலும் 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்றுச் சாதனை ஆகும்.இதற்காக ஆகும் ரூ. 3575 கோடியில் ரூ.2145 கோடியை வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது.புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசின் பங்காக ரூ.1,430 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .