“நீட் தேர்வு விலக்கு மசோதா நாளை தாக்கல்;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..!

Default Image

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.

ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில், இரவு 1 மணி வரை தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், இரவு 1 மணிக்கு மேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனுஷின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கூறுகையில், “மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது.நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும்”,என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,மாணவரின் மறைவுக்கு இரங்கல் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது எனும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக முதலமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். தனுஷின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்கொலையின் தீவிர நடவடிக்கையை நாட வேண்டாம் என்று நான் மாணவர்களை அழைக்கிறேன். வலுவாக இருங்கள்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்