நீதியின் பக்கம் நின்ற நீதிமன்றத்துக்கு நன்றி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என்றும் குற்றசாட்டு எழுந்த வருகிறது.
ஆனால், மதமாற்றம் தொடர்பாக பரப்புரை ஏதும் இல்லை என பள்ளியில் விசாரணை மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே, மதம் மாற்றம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த வாழ்க்கை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக பாஜக தெரிவித்து வந்தது. மேலும் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டியிருந்தது.
தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர், நேற்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த வழக்கை அவரச வழக்காக எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை பிறப்பித்தார். மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. நீதியின் பக்கம் நின்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு நன்றி என மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lavanya case handed over to CBI.
Thankful to Madurai High court for standing for Justice. #NationWithLavanya
— K.Annamalai (@annamalai_k) January 31, 2022