முதலமைச்சருக்கு நன்றி! புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்!

seeman twiter

துணை நிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என சீமானின் புதிய ட்விட்டர் கணக்கில் ட்வீட்.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் (@SeemanOfficial) என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. முடக்கப்பட்ட அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறதது. சீமான் கணக்குகள் மட்டுமில்லாமல், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரது ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டடுள்ளது.

இதற்கு முதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். முதல்வர் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல, ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்ட் சீமான். பழைய கணக்கு முடக்கப்பட்ட நிலையில், “செந்தமிழன் சீமான்” எனும் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார். புதிதாக தொடங்கிய கணக்கை 2,000க்கு மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். ஆனால், சீமான், ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க்கை பின்தொடர்கிறார்.மேலும், சீமானின் @NTKSeeman4TN என்ற புதிய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் நன்றி தெரிவித்து முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும். கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணை நிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்