தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சு.வெங்கடேசன் எம்.பி.
இன்று காலை மதுரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது. இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரை நானும் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.
இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும். முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார்.
மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவல்தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து.
இந்த ஆண்டு ஜூன்8 ஆம் தேதி மதுரை வந்து கொட்டாம்பட்டியில் தங்கிய முதல்வரிடம் “மதுரையில் சிறு, குறு தொழில் கூட்டமைப்பின் கான்கிளேவ்” நடத்தவேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஏற்றுக்கொண்ட முதல்வர் அவர்கள் இன்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு “தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான” அறிவிப்பை வெளியிட்டுயிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துகிறோம் முதல்வரே
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…