உரையில் இல்லாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்.
தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் ஆளுநருக்கு உரையில் திராவிட மாடல் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமில்லாமல், பேரவையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அரசு தயாரித்த ஆளுநர் உரையில் தானாக சில விஷயங்களை தவிர்த்தும் சேர்த்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிலையில், உரையில் இல்லாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறவேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…