என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது என்றும் எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள் என்றும் இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…