பிரசாந்த் கிஷோர் என்னிடம் நான்கு ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் என தெரியப்படுத்தியுள்ளார்
சமீபத்தில் வட இந்தியப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியான வீடியோக்கள் வெளியான நிலையில், இது பேசும் பொருளானது. இதனையடுத்து, வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வட இந்திய தொழிலாளர்கள் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரசாந்த் கிஷோருக்கு நன்றி
இது குறித்து சீமான் அவர்கள் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். வட இந்தியர்கள், இந்திக்காரர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
பிரசாந்த் கிஷோர் உங்களை நான் பாராட்டுகிறேன். ரூ. 400 கோடியை வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் என்னிடம் நான்கு ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் என தெரியப்படுத்தியுள்ளார் இதற்காக நான் பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…