எனக்கு பாஸ்போட்டு, வரலாற்று சாதனை படைத்த ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.. வைரலாகும் போஸ்டர்!
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமிக்கு நிஷாந்த் எனும் மாணவர், போஸ்டர் ஒன்றை வடிவமைத்து நன்றி தெரிவித்தான்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக முதல்வர் பழனிச்சாமி, 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் பாஸ் எனவும் அறிவித்தது.
அந்த தேர்வின் முடிவுகள், 10 -ம் தேதி வெளிவந்தது. அதில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே குறுங்குடி எனும் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர், தேர்ச்சி பெற்றான். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவன், நன்றி என தனது இரு கைகளையும் தூக்கி, கும்பிட்ட படி போஸ்டர் ஒன்றை வடிவமைத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றினான். அந்த புகைப்படம் வைரலானது.
அந்த மாணவன், பத்தாம் வகுப்பில் என்னை பாஸ்போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என பதிவிட்டான். மேலும், என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.