வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி என என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பை உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, கருத்துகேட்டு வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை இன்று மதியம் 3 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளார்.
இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். ஆதலால், அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி என தெரிவித்ததோடு, ‘நம்முடைய அண்ணன்’ என ஓபிஎஸ்-ஐ குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…