மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தொல்.திருமாவளவன் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகிய சமூகநீதிக் காவலர்களின் கொள்கை வாரிசாய் இன்று சனாதன சக்திகளுக்கு சவுக்கடிக் கொடுத்துள்ள அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…