உங்களின் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு, பாராட்டிய ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என முதல்வர் ட்வீட்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை பிப் 24-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய தனது வாழ்க்கை வரலாறு குறித்த உங்களின் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு, பாராட்டிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…