என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி-மு.க.ஸ்டாலின்
சாதனைகளையும், சோதனைகளையும் நான் எடைபோட்டு பார்ப்பதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக எம்.பிக்கல் கூட்டத்தில் தொடர்ந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது.
சாதனைகளையும், சோதனைகளையும் நான் எடைபோட்டு பார்ப்பதில்லை .சிலர் என்னை விமர்சித்து எழுதியுள்ளனர். அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுப்பெற்றதையடுத்து, என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.