சிறையில் வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி – கே.சி. பழனிசாமி பேட்டி
சிறையில் வைத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி என்று அதிமுக முன்னாள் எம்.பி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு இடையில் கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ,அதிமுகவின் இணையதளம் ,கொடி,லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்று அவர் மீது சூலூரைச் சேர்ந்த கந்தவேல் போலீசில் புகார் அளித்தார் .இந்தப் புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் போலீசார் அவரை கைது செய்தது.மேலும் நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் கீழ் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்பு கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது , பழனிசாமியை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஆணை பிறப்பித்தார் .நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கு இடையில் சூலூர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.இதன் காரணமாக மனு மீதான விசாரணையை பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம்.இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ,நிபந்தனையின் பேரில் கே.சி.பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.அதாவது சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கும் விதத்தில் செயல்பட கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதனால் இன்று கே.சி.பழனிச்சாமி ஜாமீனில் விடுதலையானார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கொள்கைகளுக்கு சிறை வைக்கப்பட்டுள்ளது.என்னை சிறையில் வைக்கவில்லை.சிறையில் வைத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி.என்றுமே நான் என்னுடைய எண்ணங்கள் மற்றும் கொள்கைகளிள் உறுதியாக இருப்பேன்.என்னை 100 முறை சிறையிலடைத்தாலும் எப்போதும் கொள்கையிலிருந்து விலகவே மாட்டேன்.நான் என்னைக்குமே அதிமுக -வில் தான் இருப்பேன்.வேறு எந்த கட்சிக்கும் நான் செல்ல மாட்டேன் .கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக எந்த கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தார்.