பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றது.தமிழக உள்மாவட்டங்களில் கஜா தற்போது நகர்ந்து வருகிறது.பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் எண்ணிலடங்கா உயிர்களை காக்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.