2 கோடி டெல்லி மக்கள் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கடிதம்.!
டெல்லியில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும் அதிகாரத்தில் மாநில அரசை விட மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளதை குறிப்பிடும் வகையில், டெல்லி நிர்வாக மசோதாவானது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பு மழைக்கால தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த டெல்லி நிர்வாக மசோதாவானது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதில், டெல்லி நிர்வாக மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக நன்றி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார். அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம் எனவும் , 2 கோடி டெல்லி மக்கள் சார்பாக நன்றியும் என அந்த கடிதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.