வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல்!
பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பன்முக திறமைகொண்ட கலைஞனும், ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படுபவருமாகிய கமலஹாசன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் கடந்த 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும், நற்பணி தினமாக தனது பிறந்தநாளை கொண்டாடிய எனது மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு நன்றி எனவும், உள்ளும் புறமும் தன்னை நல்லவனாக உங்கள் அன்பிற்கு சீரமைப்பேன் எனவும் தெரிவித்துள்ள அவர், அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன்.
அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்.
(2/2)என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2020
— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2020