மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞருக்கு நன்றி கூறிய சிஇஓ.!
- 21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞருக்கு சிஇஓ நன்றி தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ள 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதாவது கடந்த 2018ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அந்த பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் தமிழகத்தை சேர்ந்த 21 வயது நிரம்பிய சுரேஷ் செல்லதுரை என்ற இளைஞர், மொத்தம் 21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் பஞ்சாப் லூதியானவைச் சேர்ந்த 13 வயது நம்யா ஜோஷிக்கும் சத்ய நாதெள்ள நன்றி தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோசாப்டின் மைன்கிராப்ட் வீடியோ கேம் மற்றும் ஸ்கைப் செயலியைப் பயன்படுத்தி சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.