வாழ்த்துகளால் இன்னும் அதிகம் செயலாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என கனிமொழி எம்பி ட்வீட்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக 15 ஆவது பொதுக்குழு தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வானார்.
இதன்பின் பொருளாளர் டிஆர் பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி புதிதாக நியமனம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜிநாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பொதுக் குழு கூட்டத்தில் இருந்தவர்கள் வாழ்க என கூறி கோஷம் எழுப்பினர். திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. மேலும், திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற கனிமொழி எம்பிக்கு தோழமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, வாழ்த்துத் தெரிவித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்,ஊடகத்துறை நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி என்றும் வாழ்த்துகளால் இன்னும் அதிகம் செயலாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…