புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி – பொன் .ராதாகிருஷ்ணன்
புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி என்று பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இதனிடையே தான் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று பதிவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ! மொழி திணிப்பு எந்த மாநிலத்திலும் இருக்காது என்று தாங்கள் தெளிவுபடுத்தியதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் .பாரதியின் பார்வையில் எம் கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும், நம் முன்னோர்களையும், அறிவியல், கலை மற்றும் ஆன்மீக சாதனைகளையும் மறைத்தொழித்த கல்விக்கு முடிவு கட்டி, தமிழன் கட்டாயம் தமிழ் படிக்கும் நிலையை ஏற்படுத்தியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
பாரதியின் பார்வையில் எம் கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும், நம் முன்னோர்களையும், அறிவியல்,
கலை மற்றும் ஆன்மீக சாதனைகளையும் மறைத்தொழித்த
கல்விக்கு முடிவு கட்டி, தமிழன் கட்டாயம்
தமிழ் படிக்கும் நிலையை ஏற்படுத்தியதற்கு நன்றி !!!— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 2, 2020