திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்த லேடி சூப்பர் ஸ்டார்…..
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசியுள்ளார். எப்பொது பேசிய அவர், நடிகை நயன்தாராவை நடிகர் திலகம், புரட்சி தலைவர் போன்ற எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றோரின் பட்டியலில் சேர்க்க வேண்டாம். அவர்கள் எல்லாம் லெஜெண்ட்ஸ் என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகை நயன்தாரா குறித்து இவர் விமர்சித்ததற்கு, திரை பிரபலங்கள் பலரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் ஸ்தாலினை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து, நடிகர் ராதாரவி கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.