நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்- முதல்வர் மு க ஸ்டாலின்
கலைஞர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம் என முதல்வர் ட்வீட்.
ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். இதுகுறித்து முதல்வர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர்த் திருத்தலத்தில் கலைஞர் 100 நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் நாள் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்.’ என தெரிவித்துள்ளார்.
கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர்த் திருத்தலத்தில் #கலைஞர்100 நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் நாள் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.
காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய… pic.twitter.com/awksTUk3z4
— M.K.Stalin (@mkstalin) June 21, 2023