தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கனமழை…!
தஞ்சையில் பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வடுவூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதேபோல் புதுக்கோட்டையில் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகையில் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.