#Breaking:சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் – தமிழக அரசு..!

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் மாகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் சிறந்த மாகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தின விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.
மேலும்,சிறந்த நகராட்சியாக உதகை, திருச்செங்கோடு,சின்னமனூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த பேரூராட்சிகளாக கல்லக்குடி, மேல்பட்டம்பாக்கம், கோட்டையூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025