அதிமுக கூட்டணியில், த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு !!ஜி.கே.வாசன் அறிவிப்பு

Default Image
  • தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
  • அதிமுக – தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்- என்.ஆர்.காங்கிரஸ் -புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது வந்தது.

இந்நிலையில்  ஆலோசனைக்குப்பின் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பேன் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அதன்படி  சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-த.மா.கா இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.பின்னர் அதிமுக – தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.அதில் தமாகாவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், அதிமுக கூட்டணியில், த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாங்கள் கேட்ட தஞ்சை தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது.தேர்தல் கூட்டணி வேறு, இயக்கத்தின் லட்சியம் வேறு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்