மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

Published by
Venu

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்செல்வன் .டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.இதற்கு தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர்.இதனால் அமமுக கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.
சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ  வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்  பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.  இதனையடுத்து  ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.இதனிடையில்  தற்போது  திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு தனது  ஆதரவாளர்களுடன் வந்த  தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  அவரது 100-க்கும் மேற்பட்ட  ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
இதனிடையில் தங்கத்தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,மு.க.ஸ்டாலின் தலைமையில் தேனியில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…

11 minutes ago

மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! முக்கிய தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்!

ஈரோடு :  இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…

29 minutes ago

பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…

டெல்லி :  தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…

54 minutes ago

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…

1 hour ago

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

2 hours ago

நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!

நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…

2 hours ago