திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவி! ஓபிஎஸ், ஜெயக்குமார் விமர்சனம்

Default Image

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக.இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளின் கருத்துக்களை பார்ப்போம் .

ஓபிஎஸ் :தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தங்க தமிழ்செல்வத்திற்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதிலிருந்தே திமுகவின்  தரம் எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்:தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி கொடுத்தது திமுகவிலே வருத்தங்கள் இருக்கதான் செய்கிறது.அந்த இயக்கத்திற்க்காக ஓடா தேஞ்சி மாடா உளைச்சவங்கள விட்டுட்டு நேத்து வந்தவங்களுக்கு  பதவி கொடுத்திருக்கிறது திமுகவினர்க்கே வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது .”Pakistan Occupied Kashmir “ இருப்பது போல “Dmk Occupied Admk “ என்றுதான் சொல்லவேண்டும்  எனவும் .அதிமுக வை சேர்ந்தவர்களை பிடித்து பதவி கொடுப்பது அந்த கட்சியில் இப்படிப்பட்ட பஞ்சம் வந்ததை பார்த்தால் சங்கடமாக இருக்கு என தெரிவித்தார் .

தங்கதமிழ்ச்செல்வன்:திமுகவில் பதவி கொடுத்தது பற்றி திமுக வினர் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயக்குமார் திமுகவினர் வருத்தப்படுவார்கள் என்று கூறுவது “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை படும்” விதமாக உள்ளது.நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று கூற அவருக்கு உரிமையில்லை.இது தேவையில்லாத பேச்சு  அது அவர் பதவிக்கும் அழகல்ல என்று தங்கதமிழ்செல்வன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்