G.K.வாசன் தாயார் மறைவு ..!பாஜக தலைவர் தமிழிசை இரங்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசனின் தாயார் இன்று காலமானார்.இந்நிலையில் அவருடைய உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மரியாதைக்குரிய ஐயா, G.K.மூப்பனார் அவர்களின் துணைவியாரும், சகோதரர் G.K.வாசன் அவர்களின் தாயாருமான திருமதி.கஸ்தூரி அம்மாளின் மறைவு செய்திக் கேட்டு துயருற்றேன்.அவர்களை இழந்து வாடும் சகோதரர் G.K.வாசன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.