தமிழகத்தில் முதல் முறையாக….. புதிய உதயமாகிறது….! சட்டம் சார்ந்த மருத்துவ துறை…..!!!
தமிழகத்தில் முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ துறைக்கு தனி கட்டிடம் ஸ்டான்லி மருத்துவமனையில் அமைய உள்ளது. இதனையடுத்து ஸ்டாண்லி மருத்துவமனையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பொன்னம்பல நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இங்கு, 1,250 உயர்கல்வி மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறை, 200க்கும் மேற்பட்ட அறிய வகை பொருட்களுடன் ம்யூஸியம் மற்றும் பாதுகாப்பு டெமோ அறை என பல்வேறு பிரிவுகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.