2021ல் கதை முடிய போகிறது??…தேம்ஸ் நதி போல் வைகை..?
லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறையின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 2021 தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது ஒரு செய்தியை பரப்பி அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின். சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.
அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்கிற துணிச்சல் முடிவை எடுத்தவர் நம் முதல்வர்.மேலும் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக 10ம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர்
5 முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மதுரைக்கு ஒரு வளர்ச்சியை செய்யவில்லை. தற்போது அதிமுக ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது.
விரைவில் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது.அதே போல் லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது.
போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் மதுரையில் இருக்காது. கலாம் சொன்னது போல அதிமுகவில் முதல்வராக வேண்டும் என்று நீங்களும் கனவு காணுங்கள் அதிமுக ஆட்சியில் முதல்வராக உங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
என்று தெரிவித்த அவர் மின்சாரக் கம்பிகள் மீது துணி காய போட்ட காலம், திமுக ஆட்சி காலம். திமுக ஒரு ரவுடி கட்சி அதுபோல ஒரு அரசியல் கட்சி இருக்கவே கூடாது, அதை ஒழிக்கும் வரை அதிமுக ஓயவே ஓயாது.திமுகவை அளிக்கும் சக்தி இளைஞர்கள் நீங்களாகிய நீங்கள் தான். திமுகவின் கதை 2021ல் முடியப் போகிறதுஎன்று பேசினார்.