கரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.தம்பிதுரை
- இன்று கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் மு.தம்பிதுரை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
- கோடாங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது, இம்மாதம் 26-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.மேலும்அ.தி.மு.க சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களையும் அ.தி.மு.க அறிவித்துள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை போட்டியிடுகிறார்.
இன்று கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் மு.தம்பிதுரை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.கோடாங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
மேலும் இன்று தேனி மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரச்சாரம் செய்கிறார். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலமேட்டில் முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்