உறவாட வாமகனே, உசுரோட வாமகனே – வைரமுத்து உருக்கமான ட்வீட்
உறவாட வாமகனே, உசுரோட வாமகனே என்று வைரமுத்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனேகருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் .அவரது பதிவில்,சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே மீளவழி இல்லாம நீளவழி போனவனே கருக்குழியிலிருந்து கண்தொறந்து வந்ததுபோல் எருக்குழியிலிருந்து எந்திரிச்சு வந்திரப்பா ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே என்று தெரிவித்துள்ளார்.