நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய நிலையில், அவரது வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் கோஷமிட்டு தர்ணா போராட்டம்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று ரஜினி தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் சரி, ரசிகர்களிடையே சரி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்து வந்த நிலையில், உடல்நிலை காரணமாக, என்னை நம்பி வருபவர்களை பலிகடாக ஆக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சென்னையில் ரஜினி இல்லம் முன்பு தலைவா..வா..வா என்று கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரஜினியை சந்திக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்களுக்கு காவல்துறை அருகில் உள்ளவர்களுக்கு சொந்தரவாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கேட்காமல் தொடர்ந்து கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…