தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!
தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.!
இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்து வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முருக பத்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட தரிசனம் நடைபெற்றது.
நள்ளிரவு முதலே பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை ஆகிய கோயில்களிலும்பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. காவடி எடுப்பது, அலகு குத்துக்கொள்வது என பல்வேறு வகைகளில் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது சென்னை வடபழனி முதல் மலேசியா முருகன் கோயில் வரையில் இன்று தைப்பூச திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.