Thada Periyasamy has joined AIADMK [image source:x/@thatsTamil]
ADMK: தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதற்கு முன்பு தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது அதிமுகவில் ஐக்கியமானார்.
மக்களவை தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தடா பெரியசாமி இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட தடா பெரியசாமி வாய்ப்பு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி என்பவர் அறிவிக்கப்பட்டதால் தடா பெரியசாமி அதிருப்தியில் இருந்துள்ளார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சிகளில் இருந்தும் மாறி மாறி கட்சி மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேர்தல் சமயத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு மாறியுள்ளார் தடா பெரியசாமி.
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…