10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்!
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.