காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது மாதிரியான வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையிலும், வெடிக்காமலும் சிதறிக்கிடக்கும் இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் எடுத்து அருகில் உள்ள இரும்பு கடையில் கொடுத்து காசாக்கி விடுகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அப்படிதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனுமந்தபுரம் ஏரி பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரும்பு கடையில் ஒரு குண்டு வெடித்து இருவர் பலியானார்கள். என கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பயிற்சி எடுத்தது போக, மீதி குண்டுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்களாம். அந்த குண்டுகள் தான் தற்போது கிடைக்கின்றன என தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அப்புறப்படுத்தாமல் வெடிகுண்டுகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் ஏரிக்கரையோரம் கால்நடைகளை மேய்க்கவும், அந்த பகுதிக்கு செல்லவும் தயக்கம் காட்டுகின்றனர் என கூறப்படுகிறது,
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…