மதுரையில் குறட்டை மற்றும் மூச்சு திணறல் கண்டறியும் சோதனை தொடக்கம்.!
மதுரையில் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனை கருவி தொடக்கம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனையை கண்டறியும் கருவியை டீன் சங்குமணி நேற்று தொடங்கிவைத்தார்.
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று நோய்க்கு 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 297 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,028 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கருவியை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவி குறட்டைக்கான அறிகுறியை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஆனால் இதுவரை அதற்கான பரிசோதனை தொடங்கவில்லை.